விடுதலைப் போராட்ட வீரர்கள் வரலாறை தமிழக ஆட்சியாளர்கள் மறைக்கிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்  ரவி கூறிய கருத்துக்கு பதில் அளித்த சீமான், அதை நான் ஏற்கிறேன். அதைச் சொல்ற தகுதியும்,  நேர்மையும் உங்களுக்கு இருக்கான்னு கேட்கிறேன். எங்கள் வரலாற்றை முற்றும் முதலாக  நிராகரிச்சது நீங்கதான். உங்களுக்கு வரலாறு என்பது வட இந்தியனுங்க வரலாறு தான்.

எங்க பாட்டனுங்க வரலாறு  எங்க ? சிவாஜின்னா நீ வீரசிவாஜி  மராட்டிய மன்னனை தான் சொல்லுவ…8  நாள் சண்டை போட்டவர்…  எங்க பாட்டனங்க எட்டு மாசம் சண்டை போட்டவங்க. எங்களுக்கு இடம் வச்சிருக்கியா ? சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருக்கா ? கேந்திர வித்யாலயா… நவருத்ர வித்யாலயாவில் எங்க  வரலாறு இருக்கா ?

என் மொழி இருக்கா ?  என் பாட்டி இறந்து 85 வருஷம் கழிச்சு தான் மணிகர்ணிகா என்கிற பெண்ணே பிறக்கிறாள், ஜான்சி ராணி.  என் பாட்டியை நீ எழுதும் போதும் தென்னாட்டு ஜான்சி ராணி என்று எழுதுகிறாய். அவளை தான் நீ வடநாட்டின் வேலு நாச்சியார் என்று எழுதி இருக்கணும்.   நீ எங்க வரலாறை திரிச்சி.. திரிச்சி எழுதி ஏமாத்துனவன் நீ…  வல்லபாய் பட்டேல் 3000 கோடிக்கு செல வச்ச… எங்க பாட்டன் வ. உ. சிக்கு ஏதாச்சும் இடம் வச்சி இருக்கியா ?

வரலாற்றில் ஒரு பதிவு வச்சிருக்கியா ? எங்க பாட்டான் வ. உ. சியை விட  பெரிய இவரா வல்லபாய் பட்டேல்…  பதில் வச்சிருக்கியா ? நீ… சொல்லுங்க.. நீங்க சொல்லுங்க…  சுபாஷ் சந்திர போஸை தெரு தெருவா  கொண்டு வந்தது எங்க தாத்தா தெய்வத்திருமகன் முத்துராமலிங்க தேவர்.  வட இந்தியாவிலும்,  மேற்கு வங்கத்திலும் ஒரு எழுத்து… ஒரு  பெயர் வெச்சிருக்கியா நீ?  காட்டமாக பேசினார்.