டிசம்பர் 25-ம் தேதியான இன்று உலகம் அழியப்போகிறது எனச் சொல்லிச் சில மாதங்களாகப் பீதியைக் கிளப்பி வந்த கானா நாட்டுச் சாமியார் ஈபோ நோவா (Ebo Noah), தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார். பைபிளில் வருவது போலப் பெரும் மழை பெய்து உலகம் அழியும் என்றும், அதற்காகத் தான் ‘நோவா பேழை’ போன்ற மரக்கப்பல்களைக் கட்டி வருவதாகவும் அவர் வீடியோ வெளியிட்டு வந்தார்.
ஆனால், சொன்னபடி இன்று எதுவும் நடக்காததால், “கடவுள் மனிதர்களுக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்திருக்கார், அதனால உலக அழிவு தள்ளிப்போயிருச்சு” எனப் புது உருட்டை ஆரம்பித்துள்ளார்.
View this post on Instagram
ஈபோ நோவா வெளியிட்ட வீடியோக்களில் அவர் கட்டிய கப்பல்கள் மிகச் சிறியதாக இருந்ததும், அதில் என்ஜின் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததும் ஏற்கனவே கிண்டலுக்கு உள்ளானது.
தற்போது அழிவு தள்ளிப்போய்விட்டதாகச் சொன்னதுடன், “இன்னும் பெரிய கப்பல் கட்டி எல்லோரையும் காப்பாற்றக் கடவுள் உத்தரவிட்டுள்ளார்” எனக் கூறி வசூல் வேட்டைக்கு ஸ்கெட்ச் போடுகிறாரோ எனப் பலரும் சந்தேகிக்கின்றனர்.
“டிசம்பர் 25 லீவு என்பதால் எமன் வரவில்லையோ?” என நெட்டிசன்கள் இவரை வச்சிச் செய்து வரும் நிலையில், இது போன்ற வதந்திகளைப் பரப்பி மக்களை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
