சீனாவில், நள்ளிரவு 3 மணிக்கு குளிரானச் சாலையில், 3 வயதுச் சிறுவன் ஒருவன் தனியாக அலைந்து திரிந்த சம்பவம், இணையத்தில்ப் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. வெறும் மெல்லிய ஆடையுடன், காலில் செருப்பு கூட இல்லாமல் நடுங்கும் நிலையில் இருந்த அந்தச் சிறுவனைக் கவனித்தப் பொதுமக்கள், உடனடியாக உதவி செய்ய முன்வந்தனர்.
சாலையில் ஓடிய அச்சிறுவனை முதலில் ஒரு உணவு டெலிவரி ஊழியர் (Food Delivery Worker) பார்த்துத் தனது பைக்கை நிறுத்தி உதவினார்.
At around 3 a.m., a 3-year-old boy wearing only light clothes ran barefoot onto a cold street.
He was shivering badly from the freezing weather.
A food delivery worker saw him, stopped his work, and took the child to a warm place.
A driver also helped by letting the boy sit in… pic.twitter.com/ko3HL5zAgz— China Perspective (@China_Fact) December 3, 2025
சில நிமிடங்களில் வந்த மற்றொரு கார் ஓட்டுநர், அந்தக் குழந்தை குளிரில் இருந்து மீள, தனது காருக்குள் அமர வைத்தார். விசாரணையில், குழந்தையின் தாயார் அதிக நேரம் வேலை செய்ததால், தனியே விழித்தெழுந்த அச்சிறுவன், பதற்றத்தில் தாயைத் தேடி வெளியே ஓடி வந்துள்ளது தெரிய வந்தது.
சரியான நேரத்தில் உதவி செய்த அந்த இரு பொதுமக்களுக்கும், உள்ளூர் போலீசார் ‘கௌரவச் சான்றிதழ்கள்’ வழங்கிப் பாராட்டினர். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “மனிதம் இன்னும் உயிருடன் இருக்கிறது என்பதற்கு இது ஒரு அருமையான நினைவூட்டல்” என்றுப் பகிர்ந்து வருகின்றனர்.
