போலாந்தில் (Poland) வசிக்கும் ஒரு இந்தியப் பெண்மணி, லிஃப்ட் ஒன்றில் சிறுவன் ஒருவனைக் கட்டாயப்படுத்தி முத்தமிட முயலும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பிரபலமான அந்தப் பெண், சிறுவனுடன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, அவனை முத்தமிட முயன்றார். ஆனால், அந்தச் சிறுவன் அதனைத் தடுத்துத் தள்ளிவிட்டுக் கதவு திறந்ததும் ஓடிச் சென்றான்.
இந்தச் சம்பவத்தின் காரணமாக, அந்தப் பெண் மீது சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் பல தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
View this post on Instagram
சமூக ஊடகங்களில், இந்தச் செயல் POSCO சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது என்று பலர் குற்றம் சாட்டினர். இதன் விளைவாக, விஜயா நாயர் என்று அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண்மணி, ஒரு மன்னிப்புக் காணொளியை வெளியிட்டார்.
அதில், அந்தச் சிறுவன் தனக்கு அந்நியன் அல்ல, தனது நண்பரின் மகன் என்றும், ஐரோப்பாவில் உள்ள குழந்தைகள் மீதானச் சட்டங்கள் குறித்துத் தனக்குத் தெரியாது என்றும் விளக்கமளித்துள்ளார்.
தனதுச் செயலைப் பாலியல் துன்புறுத்தலாகக் கருத வேண்டாம் என்றும், முழு உண்மையை அறியாமல் விமர்சிக்க வேண்டாம் என்றும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
