சீனாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில், வாயில்லா ஜீவனான ஒட்டகம் ஒன்று சுற்றுலாப் பயணிகளைச் சுமக்க முடியாமல் சோர்வடைந்து சரிந்து விழும் நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தத் துயரமான சம்பவத்தை நேரில் பார்த்து வீடியோவாகப் பதிவு செய்த பிளாக்கர் ஒருவர், அந்த ஒட்டகம் எழுந்து நிற்க முயற்சிக்கும் போதெல்லாம் சோர்வினால் மீண்டும் மீண்டும் மண்டியிட்டு விழுந்ததாகவும், அதன் கால்களில் இருந்த காயங்களின் வலியால் அது தொடர்ந்து கூச்சலிட்ட சத்தம் தூரத்தில் இருக்கும் போதேதங்களை உலுக்கியதாகவும் பெரும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வைரலானதை அடுத்து உடனடியாகக் களமிறங்கிய சுற்றுலாத்துறை அதிகாரிகள், அங்கு நடத்திய தீவிர ஆய்வில் அந்த ஒட்டகத்தின் காலில் கடுமையான நோய் காயங்கள் இருப்பதையும், அது மிகுந்த சோர்வோடு இருப்பதையும் உறுதி செய்தனர்.
Seekor unta di objek wisata Devil City on the Sea, Xinjiang, China, menjadi sorotan setelah beredarnya video pada 15 Juni 2026 yang memperlihatkan kondisi hewan itu diduga kelelahan saat membawa turis.
Blogger yang merekam kejadian itu mengaku mendengar suara unta yang terus… pic.twitter.com/JTZQxvMY4K
— Kompas.com (@kompascom) June 25, 2026
“>
இதனைத் தொடர்ந்து, அந்தச் சுற்றுலாத் தளம் முழுவதிலும் உள்ள அனைத்து ஒட்டக சவாரிகளையும் தற்காலிகமாக நிறுத்தி அதிரடி உத்தரவிட்ட அதிகாரிகள், காயமடைந்த விலங்குக்கு அவசர சிகிச்சை அளிக்கவும், அங்குள்ள மற்ற ஒட்டகங்களுக்கு முறையான உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் கட்டாய ஓய்வு மாற்று முறைகளை வழங்கவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
