தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடந்து வரும் நிலையில், எக்கச்சக்கமான பிரபலங்கள் இதில் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படம் லோகேஷ் யுனிவர்சல் படமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது‌.

அதேபோல் இப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு 200% வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது. இதுவரையிலும் லோகேஷ் இந்த படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்க முடிவுசெய்யவில்லை என தெரியவந்து உள்ளது. இதன் காரணமாக விஜயுடன் கமல்ஹாசன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.