தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் வாரிசு படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவைகள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த 1999-ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சொர்ணலிங்கம் என்பவரது மகள் சங்கீதாவை நடிகர் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு திவ்யா சாஷா என்ற ஒரு மகளும், ஜேசன் சஞ்சய் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் நடிகர் விஜயை அவருடைய மனைவி சங்கீதா விவாகரத்து செய்து விட்டு லண்டன் சென்று விட்டதாக ஒரு அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார். அதன் பிறகு நடிகர் விஜய் எந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்துடன் கலந்து கொள்வார்.

ஆனால் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் இயக்குனர் அட்லி மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி போன்றவற்றிலும் தனியாகத்தான் கலந்து கொண்டார். கடைசியாக மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா ஒன்றாக கலந்து கொண்ட நிலையில், கடந்த வருடம் தொடக்கத்தில் இருந்தே நடிகர் விஜய் பொது நிகழ்ச்சிகளில் தனியாகத்தான் கலந்து கொண்டார். இதனால்தான் நடிகர் விஜயை அவருடைய மனைவி சங்கீதா விவாகரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.