நடிகர் ரஜினி முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து கூறி ரஜினி வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. இந்த நிலையில் ப்ரேமம் பட புகழ் டைரக்டர் அல்போன்ஸ் புத்ரன் ரஜினிக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்.

அதாவது, “ரஜினி சார் வீடியோ கேட்டு goosebumbs வந்தது. நேற்று வீடியோ வெளியிட்டது போன்று அடிக்கடி உங்களது மனதில் தோன்றுவதை வீடியோவாக வெளியிடுங்கள். நீங்கள் ஏபிசிடி சொன்னால் கூட அதை கேட்பதற்கு ரசிகர்கள் இருக்கின்றனர்” என அல்போன்ஸ் புத்ரன் கூறியிருக்கிறார்.