டைரக்டர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. வருகிற 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அத்துடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் ரஞ்சிதமே, தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு ஆகிய பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பெரிய ஹிட்டடித்தது. இந்த நிலையில் வாரிசு படத்தின் புது போஸ்டர் புத்தாண்டு அன்று  வெளியிடப்பட்டுள்ளது. “தி பாஸ் ரிட்டன்ஸ்” எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த புது போஸ்டரில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.