ரஜினியின் 171-வது படத்தை டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், சிபிச் சக்கரவர்த்தி சொன்ன கதை ரஜினிக்கு திருப்தி அளிக்காததாக தகவல் வெளியானது. இதன் காரணமாக ரஜினியின் 171-வது படத்தை ஞானவேல் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால் இதிலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறியதால் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  ரஜினியின் 171வது படம் அல்லது அஜித்தின் 62வது படத்தின் அப்டேட் இன்று (வியாழக்கிழமை) வெளியாகுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. லைகா தயாரிப்பு நிறுவனம், இன்று காலை 10.30 மணிக்கு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக உ அறிவித்துள்ளது. ரஜினியின் புதிய படத்தை ஞானவேலும், அஜித்தின் புதிய படத்தை மகிழ் திருமேனியும் இயக்குவதாக கூறப்படுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.