தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீப காலமாகவே நடிகர் விஜய்யின் பழைய வீடியோக்கள் பல சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து நடிகர் விஜய் தோசை சுடும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் டைனிங் டேபிளில் அமரும் விஜய் இட்லியை பார்த்துவிட்டு எனக்கு தோசை வேண்டும் என்று கூறுகிறார். உடனே சங்கீதா நான் தோசை சுடுகிறேன் என்று செல்ல வேண்டாம் நானே செல்கிறேன் என்று கூறிவிட்டு விஜய் தோசை சுடுகிறார்.

அதன்பிறகு இருவரும் சேர்ந்து டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். அப்போது சங்கீதா தோசை என்றால் 3 வேளையும் நன்றாக சாப்பிடுவார்கள். இதேபோன்று நாளைக்கு லஞ்சுக்கு பிரியாணி சமைக்கிறேன் என்று சொன்னால் இன்னைக்கு நைட்டே வயிறு காலியாகி விடும் என்று விஜய்க்கு பிடித்த சாப்பாடு குறித்து சங்கீதா கூறினார். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்களால் அதிக அளவில் வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து பெற்று பிரிய போவதாக அண்மைக்காலமாகவே தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது விஜய் மற்றும் சங்கீதாவின் பழைய வீடியோ வைரலாவது விஜய் ரசிகர்கள் மத்தியில் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.