தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பல படங்கள் தேசிய விருதுகளை குவித்துள்ளது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்கும் வெற்றிமாறனுக்கு தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து டாணாக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தமிழ் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார்.

அப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது எனவும் கண்டிப்பாக விஜய் மற்றும் வெற்றிமாறன் இணைவார்கள் என்றும் கூறினார். மேலும் இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் லியோ படத்திற்கு பிறகு விஜய் வெற்றிமாறன் இயக்கத்தில் தான் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.