
திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய DMK சட்டமன்ற உறுப்பினர் எழிலன், NMC ( National Medical Commission) லெட்டர் எழுதுறான். இனிமேல் தென் மாநிலங்களுக்கு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என்று கடிதம் எழுதுகிறான். நீங்க ஏதும் காசு கொடுத்தீர்களா ? ஒரு எய்ம்ஸ் மதுரையை உங்களால் கட்ட முடியல…
கிட்டதட்ட 19 டிபார்ட்மெண்ட்டை உள்ளடக்கி மாவட்டத்திற்கு ஒரு அரசாங்க கல்லூரி கட்டுறோம்… ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுறோம்… எவ்வளவு செலவாகும் என சுகாதாரத்துறை அமைச்சருக்கு தெரியும் ? பைத்தியக்காரத்தனமா இருக்கு…. எங்க தமிழ்நாட்டு முதல்வர் எழுதறாரு… நாங்க கஷ்டப்பட்டு, எங்க வரி பணத்துல மருத்துவ கல்லூரி கட்டுறதுக்கு தடை போட நீ யாருன்னு கேள்வி கேட்டது நம்முடைய தமிழ்நாட்டு முதல்வர்…. தெளிவாக கேள்வி கேட்டாரு…
நீ மெடிக்கல் காலேஜ்ல பர்ஸ்ட் யார் படிக்கணும்னு நீட்டை திணிச்ச… ஆரம்பத்துல எல்லா பள்ளிக்கூடங்களும் நீட்டுக்காக ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தை … சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு மாற்றினார்கள். இப்போ அதெல்லாம் மேட்டர் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு.
அப்போ அந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கின்ற பள்ளிக்கூடத்துல இரு மொழி கொள்கை கிடையாது, முமொழிக் கொள்கை…. இந்தி மறைமுகமாக திணிக்கிறாங்க… யார் படிக்கணும்னு நீட் திணிச்சாங்க… இப்போ PG யார் படிக்கணும்ன்னு நெஸ்ட் வந்து திணிக்க போறாங்க. நீங்க யாரு மெடிக்கல் காலேஜ் கட்டனுமா ? வேண்டாமான்னு நான் முடிவு எடுக்கணும்னு சொல்றது ஒன்றிய அரசு. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு… கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது….
பெடரலிசத்துக்கு எதிரானது…. சமூகநீதிக்கு எதிர்ப்பானது…. தமிழ்நாட்டு மக்கள் இது ஏதோ தேர் வோ, பெற்றோர்கள் பிரச்சினை கிடையாது. இது தமிழ்நாட்டு மருத்துவ கட்டமைப்பு பிரச்சனை. தமிழ்நாட்டோட வாழ்வாதார பிரச்சனை….. தேர்வுக்கான பிரச்சனை கிடையாது ….அப்போது இளைஞர் அணி செயலாளர் எடுத்த இந்த முன்னெடுப்புக்கு 50 லட்சம் கையெழுத்துக்கள் 50 நாட்களில்… அந்த கையெழுத்துக்கள் எல்லாமே தமிழ்நாட்டு முதல்வர் கையில் கொடுக்க போறாரு… எதுக்கு கொடுக்க போறாருன்னா ? அந்த மாநாடு மாநில உரிமைக்கான மாநாடு என பேசினார்.