சேலம் சிறுவாச்சூர் கிராமத்தில் அதிமுக சார்பாக இன்று மாட்டு பொங்கல் விழா நடந்தது. இவற்றில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பொங்கல் விழாவை துவங்கி வைத்தார். அதன்பின் இபிஎஸ் பேசியதாவது, நானும் ஒரு விவசாயி. விவசாய பெருமக்களோடு இந்த மாட்டு பொங்கல் விழாவில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இன்றைக்கு வேளாண் பெரு மக்கள் தான் நாட்டுக்கு உணவளிக்கின்றனர். விவசாயம் என்பது கடுமையான பணி ஆகும். தை பிறந்ததால் அதிமுகவிற்கு வழி பிறந்து விட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் கிராம மேம்பாட்டிற்காக திமுக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டிய அவர், திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகள் என்ன பலன் அடைந்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.