திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலித்தினார். இதையடுத்து 2023 ஆம் வருடத்திற்கான திருவள்ளுவர் விருது மற்றும் தமிழக அரசின் விருது உள்ளிட்ட 9 விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அந்த வகையில் திருவள்ளுவர் விருதை இரணியன் நா.கு.பொன்னு சாமிக்கு வழங்கப்பட்டது. அதன்பின் 2022ம் வருடத்திற்கான பேரறிஞர் அண்ணா விருதை உபயதுல்லாவுக்கும், காமராசர் விருதை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும், மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும் வழங்கினார்.
இதேபோன்று பாவேந்தர் பாரதிதாசன் விருது வாலாஜா வல்லவனுக்கும், திரு.வி.க.விருது நாமக்கல் பொ. வேல்சாமிக்கும், பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றனுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது எஸ்.வி. ராஜதுரைக்கும், தேவநேயப்பாவாணர் விருது முனைவர் இரா. மதிவாணனுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருவள்ளுவர் நாளில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில்
இரணியன் திரு. நா.கு. பொன்னுசாமி அவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருதையும்,
கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களுக்குத் தந்தை பெரியார் விருதையும்,
திரு. எஸ்.வி. ராஜதுரை அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருதையும், (1/4) pic.twitter.com/S8F0SsKVyN— M.K.Stalin (@mkstalin) January 16, 2023