MBA, MCA, M.Tech, M.Arch ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது. இதில் TANCET தேர்வுக்கு 34,020 பேரும், CEETA தேர்வுக்கு 5,281 பேரும் என மொத்தம் 39, 301 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று tancet.annauniv.edu. என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. மாணவர்கள் இந்த இணையதள பக்கத்திற்கு சென்று தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.