மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க நாளான இன்று திமுக கூட்டணியில் இணைவது குறித்து கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார். முன்னதாக திமுக கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சி வெளியேறியதால் ஒரு வெற்றிடம் இருப்பதை எம்.பி டிகேஎஸ்.இளங்கோவன் குறிப்பிட்டு திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் வர வாய்ப்புள்ளதாகவும் கூறியிருந்தார். இதனால் திமுக கூட்டணியில் கமல் இடம் பெறுவது இன்று உறுதி செய்யப்படும் என தெரிகிறது.