தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா மற்றும் வடலூர் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆண்டுக்கு மொத்தம் 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இது தொடர்பாகக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிப்ரவரி 1-ம் தேதி மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் (Bars) அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

இந்த உத்தரவை மீறி ரகசியமாக மது விற்பனை செய்தாலோ அல்லது பார்களைத் திறந்து வைத்திருந்தாலோ, சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றைய தினம் விடுமுறையை மதுவுடன் கழிக்கத் திட்டமிட்டிருந்தவர்கள், முன்கூட்டியே தங்களுக்குத் தேவையான ‘சரக்கை’ வாங்கிச் சேமிக்க இப்போதே டாஸ்மாக் கடைகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.