செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ்,  வாகனங்கள் உற்பத்தி செய்பவர்கள், மிஷனரி உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு விற்றாலோ,  வெளிநாட்டிற்கு விற்றாலோ அதற்கு என்று ஒரு தனி வரி போடுகிறார்கள். அந்த கலால் வரியோடு சேர்த்து இவர்கள் வசூலிக்கிற பணம ஆண்டுக்கு 40,000 கோடி. ஒரு வருஷத்துக்கு 6,20,000 கோடியை நாம் நிதியாக கொடுக்கிற தமிழ்நாட்டில்,  மூன்று லட்சம் கோடி ஜிஎஸ்டி வரியில் கொடுக்கிறோம்.

மற்ற மாநிலங்கள் எல்லாம் இவ்வளவு கொடுப்பதில்லை. அந்த மூன்று லட்சம் கோடியில் இதுவரைக்கும் இவங்க கொடுக்கிறது ஆண்டுக்கு கொஞ்சம் கொஞ்சமா பிரிச்சு 2000 கோடி,  3000 கோடி….  ஒரு மாசத்துல 25,000 கோடி கொடுத்தா,  50 % அவங்களுக்கு,  50 % 12,500 கோடியை உடனே 1ஆம் தேதி ஆனால் கொடுக்க வேண்டும். பணம் எல்லாருமே ஒன்றாம் தேதிக்கு முன்னாடி கட்டிடறாங்க.  ஆனால் அந்த பணத்தை பங்கீட்டு  கொடுப்பதில்லை. நமக்கு கொடுப்பது 2000, 3000, 4000 என்று பிரித்து பிரித்து கொடுக்கிறார்கள்.

இது மோடி அவர்களின் ஆட்சியில் தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை ஒன்றரை லட்சம் கோடி வருஷத்துக்கு நமக்கு கொடுக்க வேண்டியது உள்ளது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி தான் வந்து இருக்கு. 30 ஆயிரம் கோடி ரூபாய் இன்னும் பாக்கி வச்சிருக்காங்க. அந்த 30,000 கோடி ரூபாயை கொடுங்கள் என்று கேட்டால்,  நாங்கள் வளர்ந்த மாநிலத்திற்கு குறைவாக கொடுக்கிறோம். வளராத மாநிலத்திற்கு அதிகமாக கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

விதைப்பது தமிழ்நாடு,  அறுவடை செய்வது வடமாநிலம். இப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் இன்றைக்கு நிதி அமைச்சர் அவர்கள் தெளிவாக எடுத்து சொல்லுகிறார்கள். அது மட்டுமல்ல ஒவ்வொரு மாநிலத்திலும் நம்முடைய ஒன்றிய அரசு நாம் கொடுக்குற நிதியை 41 சதவீதத்தை மாநிலங்களுக்கு பங்கிட்டு கொடுக்கிறார்கள்.

கொடுக்கிற பொழுது கிழக்கு மாநிலங்களுக்கு 25.40 % , மேற்கு மாநிலங்களுக்கு 10.10 % , மத்திய மாநிலங்களுக்கு 30.30 %,  வடக்கு மாநிலங்களுக்கு 9.75%, தெற்கு மாநிலங்களுக்கு 15.8% இந்த 41% கொடுத்துட்டு,  59 % நிதியை ஒன்றிய அரசு…..  ஒன்றிய அரசு நடத்துவதற்கு வேண்டும் என்று கூறி அவர்கள்  கொடுக்காமல், அவர்கள் யாருக்கு விரும்புகிறார்களோ,  அவர்களுக்கு அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.