அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணை தொடங்குவதற்கு ஆளுநர் அனுமதி என்பதை கொடுத்திருக்கின்றார்.  முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு விசாரணை என்பது நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையிலே முன்னாள் அமைச்சர்கள் என்ற அடிப்படையில் அதற்கு ஆளுநர் உடைய ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுநர் ஒப்புதல் கொடுத்தால் தான் சிபிஐ மேற்கொண்டு நீதிமன்ற விசாரணை நடத்த முடியும் என்ற ஒரு சூழ்நிலையானது இருந்து வந்தது.

ஆனால் ஆளுநர் அந்த கோப்புகளுக்கு அனுமதி அளிக்காமல் பல மாதங்களாக கிடப்பிலை வைத்திருந்தார். எனவே அந்த கோப்புகளுக்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என திமுக அரசு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வந்தது.  தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய பல மசோதாக்களை அவர் நிலுவையில் வைத்திருப்பதாக தொடர்ந்து திமுக அரசு குற்றம் சாட்டை முன்வைத்து வந்தது.

ஆளுநர் அதிமுக முன்னாள் அமைச்சர்களை பாதுகாக்கிறாரா ? அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க ஏன் அனுமதி கொடுக்க மறுக்கின்றார் என்று தெரிவித்த நிலையில் தற்போது ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் கொடுத்துள்ளார்.