கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை அருகில் ஆபத்தை உணர்ந்துகொள்ளாமல் காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்து உள்ளனர். அப்போது கூட்டத்திலிருந்த யானை ஒன்று திடீரென சுற்றுலா பயணிகளை ஓட ஓட விரட்டி அடித்தது.

எனினும் சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதற்கிடையில் ஆபத்தை உணராமல் யானை அருகில் சென்று போட்டோ எடுத்து வரும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் கண்டிக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.