தமிழகத்தில் திமுக கட்சியில் மீண்டும் மு க அழகிரி இணைந்து செயல்படுவதை வலியுறுத்தும் வகையிலான போஸ்டர்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி வாழ்த்தி அவருடன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

அஞ்சான் நெஞ்சருக்கு வாழ்த்துக்கள், ராஜராஜ சோழனின் மூத்த மருமகன் என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டரை மதுரை மற்றும் திண்டுக்கல் நகர் முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் ஒட்டி உள்ளனர். ஏற்கனவே அழகிரியும் திமுக கொடியை தனது காரில் பறக்க விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.