கடத்தல் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய எஸ்பிக்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக தெரிவித்துள்ளார்.

காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அது முக்கியமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென்காசியில் நடந்த சம்பவம் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் இது போன்ற சம்பவம் நடைபெறுகிறது. கடத்தல் விவகாரத்தில் எஸ்.பி அனுமதி வாங்கி தான் நடவடிக்கை எடுக்க காத்திருக்க கூடிய சூழல் நிலவுகிறது. இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வந்தது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக தெரிய வருகிறது. இந்த அடிப்படையில் தற்போது பதற்றமான சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு முன்பாகவே இந்த சம்பவத்திற்கு காவல்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட கண்காணிப்பாளர்களிடம் அனுமதி வாங்க வேண்டியதில்லை, அந்தந்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தென்காசியில் திருமணமான பெண்ணை கடத்தி அவரது கணவரை தாக்கிய விவகாரத்தின் எதிரொலியாக டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், வழக்கு பதிவு செய்ய எஸ்பி அனுமதி வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.