ஜி-20 கல்வி செயற்குழு கூட்டம் நாளை முதல் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வரை சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜி 20 செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு பிப்ரவரி 1-ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து தற்போது 3 நாட்களுக்கு சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜி20 மாநாட்டில் 29 வெளிநாடுகள் மற்றும் 19 பன்னாட்டு நிறுவனம் பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும் பிரதிநிதிகள் தங்குமிடங்கள் மற்றும் பயணம் வழித்தடங்களில் ட்ரோன்கள்  பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.