ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மற்றும் திமுக கட்சி உட்பட அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பை பெறுவதற்கு களத்தில் இறங்கி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, என்னுடைய மகன் விட்டுச் சென்ற பணியை தொடரவும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தியை ஊக்குவிக்கவும் எனக்கு வாக்களியுங்கள். எம்பியாக இருந்துவிட்டு தற்போது இடைத்தேர்தலில் போட்டியிடுவதை நான் தரக்குறைவாக நினைக்கவில்லை. மேலும் மக்கள் பணி செய்வது மட்டுமே என்னுடைய ஒரே நோக்கம் என்று கூறியுள்ளார்.