பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மார்ச் 6-ம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2023 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 13-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வினை 8 லட்சம் மாணவர்கள் எழுதி இருக்கின்றனர். இதனையடுத்து பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜனவரி 4ஆம் தேதி வெளியானது. வருகிற மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையிலும் பொது தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.