பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ரவி என்ற தொழிலதிபர், அவரது இருசக்கர வாகனத்தில் ரகசியமாகப் பொருத்தியிருந்த ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் மனைவியின் கள்ளத்தொடர்பைக் கண்டுபிடித்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதியம் 3.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற மனைவி ஹிமானி, ரவி செய்த பதினைந்துக்கும் மேற்பட்ட அழைப்புகளை ஏற்காததால் சந்தேகமடைந்த ரவி, ஜிபிஎஸ் கருவி காட்டிய இருப்பிடத்தைப் பின்தொடர்ந்து ஒரு விடுதிக்குச் சென்று மனைவியை மற்றொரு நபருடன் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
Now she will file false dowry, DV, 125 case on not just husband but his entire family, police will register it happily & court will give her maintenance also because she is abla naari & isolated incidence of adultery doesn’t take away her alimony right pic.twitter.com/OHI2AC9orh
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) December 15, 2025
கடந்த 2010 ம் ஆண்டு திருமணமான இந்தத் தம்பதியினருக்கு இடையே, ஏற்கனவே 2018 ம் ஆண்டிலும் இது போன்ற சிக்கல் ஏற்பட்டுப் பிள்ளைகளின் எதிர்காலம் கருதிச் சமாதானமாகச் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். தற்போது மீண்டும் அதே போன்ற துரோகம் நடந்திருப்பதால் இனி இந்த உறவைத் தொடர முடியாது என ரவி கண்ணீருடன் விவரிக்கும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் பதிவைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பத்திரிகையாளர் தீபிகா நாராயண் பரத்வாஜ், இதுபோன்ற விவகாரங்களில் பின்னாள்களில் கணவர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் ஜீவனாம்சம் கோரி வழக்குத் தொடரப்பட வாய்ப்புள்ளதாகக் கருத்து தெரிவித்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
