ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் படுக்கை வசதி கொண்ட பெட்டியில், சீருடை மற்றும் அடையாள அட்டை இன்றி டிக்கெட் பரிசோதகர் எனக் கூறிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் பயணிகளிடம் பேரம் பேசிப் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரயில்வே விதிமுறைப்படி அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் பரிசோதகர்கள் மட்டுமே பயணிகளின் பயணச்சீட்டுகளைச் சரிபார்க்கும் அதிகாரம் பெற்றுள்ள நிலையில், சாதாரண உடையில் வந்த அந்த நபர் ஒவ்வொரு பயணியிடமும் வெவ்வேறு தொகைகளைக் கேட்டுச் சந்தையில் பேரம் பேசுவது போல நடந்து கொண்டது சந்தேகத்தை அதிகரித்தது.

Question about authenticity of this TT
byu/Alexwolfdog inindianrailways

அந்தப் பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர், அந்த நபரின் விநோதமான நடவடிக்கைகளைத் தனது கைப்பேசியில் படம்பிடித்து ரெடிட் சமூக வலைதளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் குழப்பமான முறையில் பணத்தைக் கோரிய அந்த நபரிடம் பயணிகள் கேள்வி எழுப்பியபோது அவர் மழுப்பலாகப் பதிலளித்துள்ளார்.

இதுபோன்ற போலியான நபர்களிடம் பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பயணி புகைப்படங்களுடன் இந்தப் புகாரைப் பகிர்ந்துள்ளார். சீருடை மற்றும் அடையாள அட்டை இன்றி வருபவர்கள் குறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.