ஜெயிலர் ஆடியோ லான்ச் குறித்து விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கலாய்த்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர். 

ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கான இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அதில் Hukum  என்னும் பாடல் ரஜினிகாந்த் அவர்களின் சினிமா வாழ்க்கையை உயர்த்தி பேசும் விதமாக அமைந்துள்ளது. இப்பாடல் ரஜினி  ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ள அதே சமயத்தில், தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் என்ற பேச்சும் இப்பாடல் வெளியானதுக்கு பின்பு தீவிரமாகியுள்ளது.

இதை தொடர்ந்து இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மாறி மாறி வசை பாடி வரவே, ஜெயிலர்  திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழாவிற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆயிரம் டிக்கெட் இலவசமாக வழங்கப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட நிலையில், இணையதளம் ஓப்பன் ஆன 15 நொடிகளில் அனைத்து டிக்கெட்களும் புக் செய்யப்பட்டது.

தற்போது இதை மையமாக வைத்து விஜய் ரசிகர்கள் கலாய்த்து ட்விட்டரில் தங்களது பதிவுகளை தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர். அதில், லியோ படம் ஆடியோ லான்ச் வெளியிட்ட உடனே அனைத்து டிக்கெட்டுகளும் உடனடியாக தீர்ந்து போகுமே தவிர ஒருவருக்கு கூட இலவசமாக டிக்கெட் கொடுக்கும் சூழ்நிலை ஏற்படாது எனவும், நிகழ்ச்சிக்கு ஆள் இல்லாததன் காரணமாக ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படுவதாக கிண்டல் செய்து பதிவுகளை பதிவிட்டுள்ளனர். இது  தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.