கிறிஸ்டோபர் நோலன் படங்களின் பட்ஜெட் விவரங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சமீபத்தில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓபன் ஹெய்மர் திரைப்படம் உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்தியா மற்றும் தாய்லாந்தில் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸில் நல்ல இடத்தை இப்படம் பெற்றுள்ளது. பொதுவாக கிறிஸ்டோபர் நோலன் திரைப்படத்தை பார்ப்பவர்களில் அறிவியல் ஆர்வம் கொண்டவர்கள் ஒரு புறமிருக்க மற்றொருபுறம் கண்களுக்கு நல்ல விருந்தளிக்கும் காட்சிகளை விரும்பி பார்ப்பவர்களும் இவரது தீவிரமான ரசிகர்களாக இருப்பார்கள். நோலன் பெரும்பாலும் கிராபிக்ஸ் காட்சிகளை விரும்பாதவர்.

சமீபத்தில் வெளியான  ஓபன் ஹெய்மர்  படத்தில் கூட அணுகுண்டு வெடிக்கும் காட்சி ஜீரோ CGI ல் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்ததே படத்தின் மீதான ஆர்வத்தை பெரிதும் தூண்டியது. இப்படி CGI இல்லாமல் எடுக்கும் காட்சி  பொருட்செலவை அதிகப்படுத்தும். அப்படி இருக்க, இவர் படங்களின் பட்ஜெட் அனைத்தும் மிக அதிகமாக தான் இருக்கும். இவர் இயக்கிய டார்க் நைட் ரைசஸ் திரைப்படத்திற்கான பட்ஜெட் 230 மில்லியன் அமெரிக்கன் டாலர். வசூலில் அப்படம் $1.081 பில்லியன் பெற்று சாதனை படைத்தது.

இதுவே இவர் இயக்கிய படத்தின் அதிகபட்ச பட்ஜெட் கொண்ட திரைப்படம்.  உலகம் முழுவதும் நோலன் அவர்களுக்கு இருக்கக்கூடிய மார்க்கெட் மதிப்பே அவரை நம்பி தயாரிப்பு நிறுவனம் பணம் முதலீடு செய்வதற்கான முக்கிய காரணமாக அமைகிறது. ஒவ்வொரு முறையும் கிறிஸ்டோபர் நோலன்  தனக்கான அங்கீகாரத்தை விட்டுக் கொடுக்காமல் அவருக்கே உரித்தான தனி ஸ்டைலில் படத்தை அவரது ரசிகர்களுக்கு கொடுத்து ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவாமல் திருப்தி படுத்திக் கொண்டே வருகிறார்.

இந்நிலையில் இவ்வளவு பெரிய பட்ஜெட் படங்களில் ஏதேனும் சிறிய தவறு ஏற்பட்டாலும் கூட படத்திற்கு முதலீடு செய்த கம்பெனி திவால் தான் போல என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து கலாய்த்து வருகின்றனர். கிறிஸ்டோபர் நோலன் அவர்களின் மற்ற படங்களின் பட்ஜெட் விவரங்கள் பின்வருமாறு : 

  1. Following (1998) – $6000. 2. Memento (2000) – $9 million. 3. Insomnia (2002) – $46 million. 4. Batman Begins (2005) – $150 million. 5. The Prestige (2006) – $40 million. 6. The Dark Knight (2008) – $185 million. 7. Inception (2010) – $160 million. 8. Dark Knight Rises (2012) – $230 million. 9. Interstellar (2014) – $165 million. 10. Dunkirk (2017) – $100 million. 11. Tenet (2020) – $205 million. 12. Oppenheimer (2023) – $186 million.