தளபதி விஜய் அவர்களின் அரசியல் வாழ்க்கை குறித்த சர்ச்சையான தகவல்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

சமீப காலமாக தளபதி விஜய் அவர்கள் குறித்து சினிமா சார்ந்து பேசப்படும் தலைப்புகளை விட, அவர் அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா ? என்பது தான் முக்கிய தலைப்பாக பேசப்பட்டு வருகிறது. இது  குறித்து பலவிதமான சர்ச்சைகள், வதந்திகள் ஒவ்வொரு நாளும் இணையதளங்களில் வலம் வரவே, தற்போது  சினிமா சார்ந்த தகவல்களை உடனுக்குடன் தனது டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் செய்யும் அருண் விஜய் என்பவர் விஜய் அவர்களின் அரசியல் என்ட்ரி குறித்து தனது ட்விட்டர்  பக்கத்தில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் கணிசமான வெற்றியைப் பதிவு செய்து, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழகத்தில் பெரும் சக்தியாக விஜய் மக்கள் இயக்கம் மாறக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில், பிரபல அரசியல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோரை விஜய் ரகசியமாகச் சந்திக்கப் போவதாகவும், அவர் அரசியலுக்கு வருவது குறித்து விவாதிக்கப் போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இவர் பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  ஆகியோருக்கு தேர்தல் சமயத்தில் புத்திசாலித்தனமான உத்திகளை வகுத்ததற்காக கிஷோரின் நிறுவனமான I-PAC அச்சமயம் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது என அவர் பதிவிட்டுள்ளார். அதேபோல கல்வி விருது வழங்கும் விழா, காமராஜர் பிறந்த நாளன்று இலவச பயிலகம் திறப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளின் பின்னணியில் I-PAC  நிறுவனம் இருப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றன.