பிரபல மராத்தி நடிகர் ஜெயந்த் சாவர்க்கர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 87. இவர் இந்தி, மராத்தி மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹரி ஓம் விதாலா, 66 சதாசிவ், சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு உஷா பென்ட்சே என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.