இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மூத்த குடிமக்களுக்காக பல்வேறு தரப்பட்ட சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் புனித பயணங்கள் குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்கு புனித பயணம் தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி மத்திய அரசு 20,000 பேரை இலவசமாக புனித தளங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இவர்கள் புனித தளங்களான ராமேஸ்வரம், துவாரகா, காமாக்யா, சீரடி, ஜகந்நாத், பூரி அயோத்தி மற்றும் காசி போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இதற்காக ஜனவரி 21-ஆம் தேதி முதல் மார்ச் 29-ஆம் தேதி வரை மத்திய பிரதேசத்தில் இருந்து 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் புனித தளங்களுக்கு சுற்றுப்பயணம் செல்பவர்களின் பயண செலவு, உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட வரி செலுத்தாதவர்கள், 62 வயது வரை உள்ள பெண்கள், 60% மேல் உடல் ஊனமுற்றவர்கள், இவர்களுடன் பயணிக்க விரும்பும் இருவரில் ஒருவருக்கு வயது குறைவாக இருந்தால் அவர்களும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 60% உடல் ஊனமுற்றவர்கள் எவ்வித செலவும் இன்றி தங்களுடன் ஒருவரை அழைத்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.