பொதுவாக நம்முடைய பெற்றோர்களுக்கு ஏதேனும் ஒரு பழக்கம் இருக்கும். அந்த பழக்கம் நமக்கு விநோதமாகவும் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் அதற்கான காரணத்தை புரிந்து வைத்திருப்பார்கள். அவ்வாறே தன்னுடைய தாய் பல காலமாக பின்பற்றிய ஒரு செயயை விக்ரம் புத்தநேசன் என்பவர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதாவது விக்ரமின் தாயார் ஒரு சிறிய தட்டு ஒன்றில் தான் தினமும் உணவருந்துவராம். எத்தனையோ முறை வேறு தட்டில் சாப்பிடுமாறு கூறியும் அதனை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை.

இத்தனை காலத்துக்கு பிறகு தன்னுடைய தாய் இறந்த பிறகு உறவினர்களிடம் இந்த தட்டு பற்றி கேட்கும் பொழுது தான் அவருக்கு அந்த உண்மை தெரிய வந்துள்ளது. அதாவது இது குறித்து அவர் கூறுகையில், இது என்னுடைய தாய் உணவருந்தும் தட்டு. இதனை கடந்த 20 வருடமாக அவர் பயன்படுத்தி வருகிறார். இது மிகச் சிறிய தட்டு. ஆனால் அவர் இறந்த பிறகு தான் இதில் மட்டும் ஏன் அவர் சாப்பிட்டார்? என்பது அவர் இறந்த பிறகு தான் தெரியவந்தது. நான் பள்ளியில் படிக்கும் பொழுது போட்டியில் பரிசாக வென்று பெற்ற தட்டு என்பது. 1999 ஆம் வருடம் இந்த தட்டினை நான் பரிசாக வென்றுள்ளேன்.

இந்த 24 வருடமும் என்னுடைய தாய், நான் வெற்றி பெற்ற இந்த தட்டில் தான் சாப்பிட்டுள்ளார். எவ்வளவு பெரிய மனது பாருங்கள். இத்தனைக்கும் இந்த உண்மைடை கூட அவர் என்னிடம் சொல்லியது கூட கிடையாது. அம்மா உன்னை மிகவும் நான் நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.