கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டிருந்த மாற்றுதிறனாளி திடீரென பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் சென்னம்பட்டியில் வசிக்கும் செந்தில்(40) என்பது தெரியவந்தது.

இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால் இதுவரை எந்த வேலையும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தும், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவில்லை இதனால் மன உளைச்சலில் செந்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. அவரை போலீசார் சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.