விழுப்புரம் அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் இமானுவேல் ஆகியோர் உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண்ணால் ஆன காதணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஏற்கனவே சுடுமண் பொம்மை, சுடுமண் புகைபிடிப்பான், அகல் விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.
தற்போது வட்ட வடிவம் மற்றும் தோடு போன்ற வடிவத்தை உடைய காதணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காதணியின் மேற்புறத்தில் இருக்கும் கோட்டுருவம்அந்த கால மக்களின் கலை நுணுக்கங்களை எடுத்து காட்டுகிறது. இதனையடுத்து சுடுமண் பொருட்கள் சீக்கிரம் அழியாது என்பதால் அந்த காலத்தில் சுடுமண் காதணிகள் புழகத்தில் இருந்திருக்கிறது என கூறியுள்ளனர்.