தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்றனர். அதில் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கான 200 மீட்டர் மெட்லி நீச்சல் போட்டியில் மதுரை சேர்ந்த ஹாஜரா பாத்திமா என்ற மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, முதன்மை உடற்கல்வி ஆய்வாளர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.