
நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் என்ன கேட்கிறேன்… நீ எதுக்கு எனக்கு ? பிஜேபி, காங்கிரஸ் என் நிலத்துக்கு எதுக்கு ? அந்தக் கட்சி தேவை என்றால் ? நீ எதுக்கு திமுக ஆரம்பிச்ச. பதில் சொல்லு ? காங்கிரஸ் தானே ஆண்டு கொண்டு இருந்துச்சு. திமுகவ எதற்காக ஆரம்பித்தீர்கள் ? ஒரு தொங்கு சதையா ? பன்னியின் மேல ரத்தத்தை குடிக்கிறதை தூக்கிட்டு எதற்கு சுமக்கிற ? அதை உதிர்த்துவிடு. முடியாதுன்னு சொல்லாத… அம்மையார் ஜெயலலிதா காங்கிரஸ், பிஜேபி இல்லாமல் 37 வென்று போகவில்லையா ?
நான் நிக்கலையா… பத்து பைசா இல்லாத பரதேசி பைய மகன் நானே தனித்து நிற்கிறேன், வாடா பாத்துக்கிடுவோம்னு… எதுக்கு என் மொழிக்கு நிப்பானா ? என் உணர்வுக்கு.. என் உரிமைக்கு.. என் உயிருக்கு… என் நிலத்திற்கு.. என் வளத்திற்கு… எதுக்கும் நிக்க மாட்டான். என் வீட்டு எழவுக்கு அழாதவன், எதுக்குடா அழுவான் ? எதுக்குடா அவன கட்டி புடிச்சு நீ அழுதுட்டு இருக்க ? எதுக்கு…. ஒழிக்கணும் இவனுங்கள… எங்களுடைய கோட்பாடு… நாம் தமிழர் கட்சியின் கோட்பாடு…. ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை இந்த நிலத்தில் இருந்தே ஒழிக்கணும்.
காங்கிரஸ் ஆள்வதை விட்டால், பிஜேபி. பிஜேபிக்கு எதிரி காங்கிரஸ். இன்னைக்கு கிறித்துவ பெருமக்கள் பாவியாக இருந்தாலும்… திமுகவை சொல்றது. பாவியாக இருந்தாலும் அந்தக் காவியை எதிர்க்க இந்தப் பாவி தானே தேவைப்படுகிறான். எதுக்கு காவியை பாவியை வைத்து எதிர்க்கிற…. தூய ஆவி என்னைய வச்சு எதிர்த்திட்டு போ. எதுக்கு பாபின்னு தெரிஞ்சும், எதுக்கு அவனை வச்சு… காவியை எதிர்க்கிற ? இல்ல என்னை விட பெரிய எதிரியா அவன் ? ஒரு கோட்பாட்ட அளவுல பேர சொல்லு என சீமான் பேசினார்.