காவிரி தண்ணீர் வரத்தால் டெல்டாவின் குருவை சாகுபடி பாதிப்பை ஆய்வு செய்ய வேளாண் துறை சிறப்பு அதிகாரிகளோடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மேட்டூர் அணையில் போதிய  அளவு தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குருவைப் பயிர்கள் கருகி வருகின்றன. தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடகா அரசு தர மறுப்பதால் குறுவையை காப்பாற்ற முடியாமலும், சம்பா சாகுபடியை தொடர முடியாமலும் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தின் வேளாண் துறை செயலாளர், திருவாரூர் மாவட்ட வேளாண் துறை ஆணையர்,  மயிலாடுதுறை மாவட்ட வேளாண் ஆணையர், நாகை மாவட்ட  வேளாண் துறை இயக்குன ஆகியோர் கலந்து கொண்டுள்ள ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது.

இதில் இடங்களில் பயிர்கள் வளராமல் இருக்கின்றன. பல லட்சம் ஏக்கர் பயிர்கள் அறுவடைக்கு வராமல் காத்திருக்கின்றன. எனவே சில இடங்களில் போர்வெல் இருந்தால் போர்வெல்லை போட்டு நீரை எடுத்துக் கொள்ளுங்கள் அப்படின்னு ஆலோசனையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்,  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்திலே குறிப்பாக ஒரு நிவாரணம் வழங்கலாம் என பரிந்துரைக்கப்படும். தமிழக அரசின் உடைய வருவாய் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து கொடுக்கலாமென அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.