அமைச்சர் உதயநிதியை பேசியதன் முழு விவரம் அறியாமல் பிரதமர் மோடி பேசுவதா என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சனாதனம் விவகாரத்தில் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போது ஆதரவு தெரிவித்து அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இந்த விஷயத்தை பொறுத்தவரைக்கும் நேற்றைக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது பற்றி பிரதமர் மோடி பேசி இருந்தார். பிரதமருக்கு ஒரு உண்மையை அறிந்து கொள்ளும் அனைத்து வசதிகளும் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் பிரதமர் இதுபோன்று பேசினார் ? அமைச்சரின் தலைக்கு விலை வைத்து ஒருவர் அறிவிக்கிறார் என்றால் ? அவர் மீது உத்திரபிரதேச மாநில அரசால் நடவடிக்கை எடுக்க முடிந்ததா ?  வழக்கு போட்டதா? மாறாக உதயநிதி மேல் வழக்கு போட்டுள்ளார்கள்.

சனாதனத்தை பற்றி தவறாக பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் பேசியதாக செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஒரு செய்தி வந்தால் அது உண்மையா ? பொய்யா ? என்பதை அறிந்து கொள்ளும் அனைத்து வசதிகளும் பிரதமருக்கு உண்டு.  ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அமைச்சர் ஏவா வேலு பேசிய வீடியோ ஒன்றில் உண்மை தன்மையை அறியாமல் நாடாளுமன்றத்திலேயே பேசியிருக்கிறார் பிரதமர்.  இதையெல்லாம் பார்த்தால் நாட்டுக்கும்,  நாட்டு மக்களுக்கும் கொடுத்த எந்த வாக்குறுதையும் நிறைவேற்றாமல் பிரதமர் தற்போது மக்களை திசை திருப்பி சனாதன போர்வையை போர்த்திக் கொண்டு குளிர் காய நினைப்பதாக முதலமைச்சருடைய அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.