சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று வீசீக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனத்தின் சார்பில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தாவிக்க தலைவர் விஜய் இந்நூலை வெளியிட்டார். இதை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது. இந்த விழாவில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இல்லை.
ஆனால் அவரின் மனசாட்சி இங்க தான் இருக்கு என்று எனக்கு தெரியும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பேசினார். அவர் கூறியதாவது, தொல்.திருமாவளவன் இந்த நிகழ்ச்சிக்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. நான் இப்பொழுது சொல்கிறேன், அவரது மனசு முழுவதும் இங்கே தான் உள்ளது என்று கூறினார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில், அனைவருக்குமாணவர் அம்பேத்கர். புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவின் மனசாட்சி இங்கு தான் இருக்குது என்று கட்சியில் இருக்கும் பொதுச் செயலாளரை கூறுகிறார். இன்றைய அரசியல் நாடகத்தில் திருமாவின் ரெட்டை வேடம். ஒரு வேடம் திமுக கூட்டணிக்கு எதிராக, திமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒரு வேடம். நேராக சொல்லாதது நேர்மையான முடிவா, அல்லது நேரத்திற்கு ஏற்ற முடிவு செய்து கொள்ளலாம் என்ற முன்னேறி எச்சரிக்கை முடிவா அல்லது எச்சரிக்கை செய்யும் முன் நோட்டமா எனக் குறிப்பிட்டுள்ளார்.