இந்து மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பில் சனாதன இந்து தர்மம் எழுச்சி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், மோடிக்கு எதிராக அணி திரட்டும் போது நீங்க பீகார்  போகலாம். அப்போ உங்களுக்கு இந்தியும் தெரியாது,  ஒன்னும் தெரியாது. இங்கிலீஷ் தெரியாது. அண்ணாமலை கன்னடத்தில் பேசறாரு, இங்கிலிஷ்லயும் பேசுறாரு, போற இடத்துல எல்லாம் நல்லா பேசுறாரு.

ஸ்டாலின் அண்ணாமலை மாதிரி நினைச்சா கூட ஸ்டாலினால் ஒரு தலைவனாக மாற முடியுமா ?  ஸ்டாலின் கருணாநிதி மகன் என்பதால் முதலமைச்சராக இருக்கின்றார். வேறு என்ன தகுதி இருக்கு சொல்லுங்க ? ஸ்டாலினை தவறான ஆலோசகர்கள், தவறாக வழி நடத்துகிறார்கள். அவங்க சொல்றாங்க..  மோர் டேஞ்சரஸ் ஸ்டாலின் என்று..

திராவிட மாடல் என்று சொல்லுறாங்க… ஏன்ப்பா..!  அண்ணாதுரைக்கு தெரியாதா ? திராவிட மாடல் என்று ?  அண்ணாதுரை  ஒன்றியம் என்று சொன்னாரா ?  கருணாநிதி சொன்னாரா ஒன்றியம் என்று சொன்னாரா ? அவங்க எல்லாம் மத்திய அரசு என்று தானே சொல்லிட்டு இருந்தாங்க., பாமககாரங்க நடுவண் அரசுன்னு  சொன்னாங்க,  நல்ல வார்த்தை…  தமிழ் வார்த்தை.

அது என்ன ? நீங்க ஆட்சிக்கு வரும் முன்னாடி வரைக்கும் மத்திய அரசுன்னு சொல்லிட்டு, ஆட்சிக்கு வந்த உடனே என்ன ஒன்றிய அரசுன்னு சொல்லுறீங்க ? அப்ப முழுக்க – முழுக்க  திமுக கொள்கை படி ஆட்சி பண்ணல  திகாவை எதிர்த்து தானே திமுக வந்தீங்க.  எதனால் திமுக வெளியே வந்தது ? ஈவேராரோட தகராறு, கல்யாணம், திக கொள்கை வேண்டாம். ஒன்று குலம்,  ஒருவனே தேவன் என சொல்லிட்டாரு அண்ணாதுரை என தெரிவித்தார்.