தமிழகத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது.  இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று  இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இதுகுறித்து பலதரப்பிலிருந்து விமர்சனங்கள் வந்தது. தற்போது இந்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உரிமை தொகையை வழங்குவது தாமதமானது  குறித்து முதல் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாது பொய்யான வாக்குறுதி அளித்து திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது என்று சிலர் விமர்சனம் வைத்தனர். உரிமை தொகையை நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே கொடுத்திருப்போம். ஆனால் நிதி நிலைமை  மோசமாக இருந்ததாலும், கொரோனா என்ற கொடிய நோயில் நாடு சிக்கி தவித்து வந்ததாலும் உடனடியாக இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.