உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் அர்ஷத் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் நீச்சல் குளத்துக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டது. இந்த சண்டையில் ஒரு வாலிபர் அர்ஷத்தை  துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார்.

அப்போது அவருடைய மகன்கள் உடனிருந்தும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது. அங்கு ‌ நடந்த பிரச்சனைக்கு என்ன காரணம் என்பது சரிவர தெரியவில்லை. இந்நிலையில் நீச்சல் குளத்தில் அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.