தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் பொது மக்களுடைய வசதிக்காக பல்வேறு அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மின்கட்டணம் கணக்கீடு செய்வதில் புதிய மாற்றம் கொண்டு வர TANGEDCO  முடிவு செய்துள்ளது. அதன்படி முதலாவதாக ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தொடங்க உள்ளது. இதன் மூலமாக ரீடிங் எடுப்பதில் குளறுபடிகள் ஏற்படுவதை தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் மின் பயன்பாட்டை தானாகவே கணக்கெடுக்க முடியும். மின்சாரத்துறை ஊழியர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டிய தேவை கிடையாது.

நுகர்வோர்களின் கட்டண விவரம் எஸ்எம்எஸ் வாயிலாகவே அவர்களுக்கு அனுப்பப்படும். அதேபோல வீட்டின் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் போன் செய்ய வேண்டாம். அதை மின்வாரிய அலுவலகத்தில் இருந்தபடியே தெரிந்துகொள்ள முடியும். இந்த திட்டமானது தமிழகம் முழுவதும் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. அதேபோல இன்னொரு திட்டத்தையும் தொடங்க இருக்கிறது. அதாவது ப்ளூடூத் ஸ்மார்ட் மீட்டர் இணைப்பு. இதில் பைபர் ஆப்டிக் கோடுகள் மூலம் மின் இணைப்பை கண்காணிக்கலாம் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செல்போனுக்கு இந்த தகவல் அனுப்பப்படும் விதமாக தொழில்நுட்ப  வசதிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.