கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலக்காடு சாலையில் கல்லூரி மாணவி ஒருவர் ஸ்கூட்டரில் சென்றார். அந்த மாணவியின் ஸ்கூட்டர் முகமது ஷெரீப் என்ற வாலிபரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் கல்லூரி மாணவி உடனே முகமது ஷெரீப்பிடம் மன்னிப்பு கேட்டார்.

ஆனால் முகமது அந்த மாணவியை விரட்டி சென்று முத்தம் கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முகமது ஷெரீப்பை கைது செய்தனர்.