புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகம் குடியிருப்பு பகுதிகள் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சில வாலிபர்கள் லாவகமாக மலை பாம்பை பிடித்து சாக்குப்பையில் அடைத்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.