காட்டில் ‘பயமறியா வீரன்’ என்று புகழப்படும் ஹனி பேஜர், தனது துணிவால் ஏழு பெண் சிங்கங்களை விரட்டிய அசாதாரண சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் @animal.safaris பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஜங்கில் சஃபாரியின்போது பதிவு செய்யப்பட்டது.
இதில், ஒரு ஹனி பேஜர் தனது குட்டியுடன் செல்லும்போது, ஏழு பெண் சிங்கங்கள் அதை தாக்க முயல்கின்றன. ஆனால், இந்த சிறிய உயிரினம் பயமே இல்லாமல் பதிலடி கொடுத்து, சிங்கங்களை பின்வாங்க வைத்து, காட்டில் தான் தான் ‘பாஸ்’ என்பதை உரத்த குரலில் காட்டியுள்ளது. இந்த வீடியோவை 41,000-க்கும் மேற்பட்டோர் பாராட்டியுள்ளனர்.
View this post on Instagram
ஹனி பேஜரின் துணிவுக்கு காரணம் அதன் தனித்துவமான உடலமைப்பு. இதன் தோல் மிகவும் தடிமனாகவும், தளர்வாகவும் இருப்பதால், எந்த வேட்டையாடியாலும் இதை எளிதில் பிடிக்க முடியாது. மேலும், இதன் கூர்மையான பற்களும், வலிமையான தாடைகளும் எலும்புகளை கூட நொறுக்கும் ஆற்றல் கொண்டவை.
இவை விஷத்தை எதிர்க்கும் தன்மையும் கொண்டவை. இந்த பண்புகளால், ஹனி பேஜர் எந்தப் போரிலும் தோல்வியடையாத வீரனாக விளங்குகிறது. இணையவாசிகள், “இவ்வளவு தைரியம் ஒரு உயிரினத்துக்கு இருக்க முடியுமா?” என்று வியந்து, “இது ஜங்ரு குட்டி டான்,” என்று புகழ்ந்து கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
