ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மிகவும் மோசமாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியதோடு, அந்நாட்டின் மீது இன்றிரவு மிகப்பெரிய தாக்குதலை நடத்தப்போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இன்றைய தாக்குதலுக்குப் பிறகு நிலைமை எப்படி மாறப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள இந்தச் சூழல், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.