தவெக தலைவர் விஜய், கடந்த 13ஆம் தேதி திருச்சியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கி, அதன் பின்னர் பெரம்பலூர், அரியலூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தனது பிரச்சார நடவடிக்கைகளை நிறைவு செய்தார்.
ஆரம்பத்தில், வரும் 27ஆம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் பிரச்சாரம் செய்யும் திட்டம் வகுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த திட்டத்தில் திடீர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின் படி, அந்த நாளில் விஜய் சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளில் தனது பிரச்சாரத்துக்கு செல்ல உள்ளார். அதன்படி, 27ஆம் தேதி காலை 11 மணிக்கு நாமக்கல்லில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். மேலும், அதே நாளில் மாலை நேரத்தில் கரூரிலும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் திடீர் திட்ட மாற்றம், கட்சி வட்டாரங்களிலும், ரசிகர்களிடையிலும் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
